அபுதாபி மற்றும் ஷார்ஜா சிறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான கைதிகளை ரமலான் முன்னிட்டு விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது
அபுதாபி மற்றும் ஷார்ஜா சிறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான கைதிகளை ரமலான் முன்னிட்டு விடுவிக்க உத்தரவு
ஷார்ஜாவின் ஆட்சியாளரும் மற்றும் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினருமான ஷேக் டாக்டர் அப்துல்லா பின் அப்துல் அஸிஸ் அவர்கள் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஷார்ஜாவின் சிறைச்சாலை மற்றும் திருத்த மையங்களில் உள்ள 206 கைதிகளை விடுவிக்க சுல்தான் பின் முகமது அல் காசிமி உத்தரவிட்டுள்ளார். புனித ரமலான் மாதத்திற்கு முன்னதாக இது தொடர்பான பொது மன்னிப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபோல் புனித ரமலான் மாதத்திற்கு முன்னதாக 439 கைதிகளை சிறைகளில் இருந்து விடுவிக்குமாறு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும் உத்தரவிட்டுள்ளார்.
பொறுமை,சகிப்புத்தன்மை மற்றும் நன்னடத்தை ஆகியவற்றின் அடிப்படையில் விடுதலை செய்ய கைதிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் மன்னிக்கப்பட்ட கைதிகள் புதிய வாழ்க்கையைத் தொடங்கவும், அவர்களின் வாழ்நாள் முழுவதையும் இனிமுதல் தங்கள் குடும்பங்களுடன் செலவிடவும் இதன் மூலம் முடியும்.