இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை மே-31 வரை நீட்டிப்புச் செய்து உத்தரவு வெளியாகியுள்ளது
இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை மே-31 வரை நீட்டிப்பு
இந்தியாவில் தற்போதுள்ள சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்(DGCA) மீண்டும் நீட்டித்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள தடை மேலும் மே-31 வரை நீட்டிப்பு செய்து புதிய உத்தரவு இன்று(30/04/21) வெள்ளிக்கிழமை மாலையில் வெளியிட்டுள்ளது. நாட்டில் தீவிரமாக பரவி வருகின்றன கோவிட் நிலைமையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு விமானங்கள் மற்றும் இந்திய சிவில் விமான போக்குவரத்து நிறுவனத்தின் அனுமதி பெற்றுள்ள சிறப்பு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது. மேலும் இந்தியா வளைகுடா உள்ளிட்ட 28 நாடுகளுடன் Air-Bubble ஒப்பந்தங்களை செய்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த நாடுகளுக்கான விமான சேவையில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.