BREAKING NEWS
latest

Friday, April 9, 2021

அமெரிக்காவில் இந்திய தம்பதிகள் குத்தி கொலை செய்யப்பட்ட துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

அமெரிக்காவில் இந்திய தம்பதிகள் குத்தி கொலை செய்யப்பட்ட துயரமான செய்தி அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Image : உயிரிழந்த பாலாஜி மற்றும் மனைவி

அமெரிக்காவில் இந்திய தம்பதிகள் குத்தி கொலை செய்யப்பட்ட துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

அமெரிக்காவின் நியூஜெர்சியில் இந்திய தம்பதிகளான மென்பொருள் பொறியாளர் பாலாஜி பாரத் ருத்ராவர்(வயது-32) மற்றும் அவரது மனைவி ஆர்த்தி பாலாஜி(வயது-30) ஆகியோர் புதன்கிழமை இரவு நியூ ஜெர்சியிலுள்ள வடக்கு ஆர்லிங்டன் போரோவில் உள்ள அவர்களது வீட்டில் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பாலாஜியின் தந்தை பாரத் ருத்ராவர் அவர்கள் பி.டி.ஐ-யிடம் தெரிவித்துள்ள செய்தியில்,அவர்களது நான்கு வயது மகள் வீட்டின் பால்கனியில் இருந்து தொடர்ந்து அழுவதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த போது இருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது என்றார். காவல்துறையின் விசாரணைக்கு பிறகே இருவரின் மரணத்திற்கான காரணம் கண்டறிப்படும் என்று அமெரிக்கன் புலனாய்வாளர்கள் கூறியதாக தந்தை தெரிவித்துள்ளார். இதில் மிகவும் சோகமான செய்தி என்னவென்றல் ஆர்த்தி ஏழு மாத கர்ப்பமாக இருந்தார். சில அமெரிக்க செய்தி ஊடகங்கள், பாலாஜிக்கும், ஆர்த்திக்கும் வயிற்றில் குத்தப்பட்ட காயங்கள் இருந்தது எனவும்,வீட்டில் இழுபறி ஏற்பட்டது போன்ற அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் தெரியவரும் எனவும், உடலை வீட்டிற்கு(இந்தியா) கொண்டு வர ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் எனவும், பேரக்குழந்தை இப்போது பாலாஜியின் நண்பருடன் இருப்பதாக பாரத் கூறினார். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி, தனது மனைவி ஆர்த்தியுடன் 2015 இல் அமெரிக்கா சென்றார். இவர்களுக்கு 2014 டிசம்பரில் திருமணம் நடந்துள்ளது. அமெரிக்கா செல்வதற்கு முன்பு பாலாஜி ஒரு முன்னணி இந்திய மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Add your comments to அமெரிக்காவில் இந்திய தம்பதிகள் குத்தி கொலை செய்யப்பட்ட துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

« PREV
NEXT »