குவைத்தில் 6000 தினார்களை இழந்த இந்திய செவிலியர்;போலியான அழைப்புகள் மூலம் மோசடி யாரும் ஏமாற வேண்டாம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்
Image : போலியான வந்த இரண்டு அழைப்புகள் இங்கு காணலாம்
குவைத்தில் 6000 தினார்களை இழந்த இந்திய செவிலியர்;போலியான அழைப்புகள் மூலம் மோசடி யாரும் ஏமாற வேண்டாம்
குவைத்தில் தொலைபேசி அழைப்புகள் மூலமாக மோசடி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.இது போன்ற பல சம்பவங்கள் சமீபத்திய நாட்களில் நடந்துள்ளதாக தொடர் புகார்கள் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளது. குவைத்தில் உள்ள முக்கிய வங்கிகளின் அதிகாரிகள் என்ற பெயரில் மோசடி செய்பவர்கள் தொலைபேசி வழியாக வாடிக்கையாளர்களைஅணுகுகிறார்கள். பின்னர் அழைப்பை எடுக்கும் நபர்கள் சிந்தித்து செயல்படுவதற்கு முன்பு வங்கி கணக்கு தகவல்களை பெற்று கடந்த நாட்களில் மோசடிகள் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மியாவில் உள்ள 57-வயதான இந்திய பெண் ஒருவர் ஒரு நாளில் 1760 தினார்களை இழந்துள்ளார். இதுபோல் கடந்த வாரம் ஷுவைக் காவல் நிலையத்தில் இந்திய செவிலியர் 6,000 தினார்களை இழந்தார் என்று புகார் அளித்துள்ளார்.
இதேமாதிரி இந்திய தூதரத்தின் அதே எண்களை குளோனிங் செய்து அதன் வழியாக தூதரக அதிகாரிகள் என்ற பெயரில் இந்தியர்களை அழைத்து பணம் மற்றும் வங்கி விபரங்கள் கேட்டு அழைப்புகள் வந்துள்ளதாக பலர் புகார் அளித்த நிலையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலும் எச்சரித்துள்ளது. இந்திய தூதரகம் இப்படிப்பட்ட தகவல்களை பெற எந்தவிதத்திலும் இந்தியர்களை தொடர்பு கொள்ள மாட்டார்கள் எனவும் தூதரக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.