குவைத்தில் பலருக்கும் நன்கு தெரிந்த முகமான சமூக செயற்பாட்டாளர் கோபகுமார் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது
Image : மரணமடைந்த கோபகுமார்
குவைத்தில் பலருக்கும் நன்கு தெரிந்த முகமான சமூக செயற்பாட்டாளர் கோபகுமார் மரணமடைந்தார்
குவைத்தில் வேலை செய்துவந்த இந்தியா,கேரளா,திருவனந்தபுரம் நாவாய்குளம், வெட்டியாரா பகுதியை சேர்ந்தவர் கோபகுமார்(வயது- 54) இன்று(08/04/21) மாலையில் அதான் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. உட்புற இரத்தப்போக்கு காரணமாக அவர் கடந்த 22 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ECO கம்பெனியில் Safety Officer ஆக வேலைபார்த்து வந்தார்.
கோபன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குவைத்தில் வசித்து வந்தார் ,முன்பு மங்காஃப் பிளாக்-3 யில் சங்கீத ஆடிட்டோரியத்தை நடத்தி வந்தார். N.S.S மங்காஃப் பிராந்தியத்தில் முன்னணி செயற்பாட்டாளராக இருந்தார். நாடகம் மற்றும் பாடல் உள்ளிட்ட குவைத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தில் நிகழ்வுகளில் கோபன் குமார் முக்கிய நபராக இருந்தார்.இவருக்கு ஷைலாஜா என்ற மனைவியும்,குழந்தைகளும் உள்ளனர்.