BREAKING NEWS
latest

Tuesday, April 27, 2021

நேபாளம் வழியாக மற்ற நாடுகளுக்கு செல்ல இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது

நேபாளம் வழியாக மற்ற நாடுகளுக்கு செல்ல இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது;நாளை முதல் உத்தரவு நடைமுறையில் வருகின்றன

நேபாளம் வழியாக மற்ற நாடுகளுக்கு செல்ல இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது

நேபாளம் வழியாக மற்ற நாடுகளுக்கு செல்ல இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை(28/04/21) நள்ளிரவு முதல் இந்த முடிவு நடைமுறையில் வருகின்றன எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இரண்டாம் கட்ட மரபணு மாற்ற கொரோனா கவலைக்கிடமாக பரவி வருகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் நேபாளை தற்காலிக புகலிடமாக கொண்டு மற்ற நாடுகளுக்கு இனிமுதல் இந்தியர்களால் பயணிக்க முடியாது. மேலும் மற்றோரு அறிவிப்பு வெளியாகும் வரையில் இந்த தடை நடைமுறையில் இருக்கும். இந்த அறிவிப்பு வெளியான நிலையில், நேபாள இந்திய தூதரகமும் இந்தியர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தற்போது மற்ற நாடுகளுக்கு செல்ல அங்கு தங்கியுள்ள இந்தியர்கள் நாளை இரவு வரையில் பயணிக்க எந்த பிரச்சனையும் இருக்காது எனவும், அதன் பிறகு அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு செல்ல முயற்சி செய்தால் அவர்களுக்கு தடைவிதிக்கப்படும் எனவும், ஆனால் இந்தியாவில் இருந்து நேபாளம் செல்லவும் அங்கிருந்து இந்தியா வரவும் பிரச்சனை இருக்காது.

முக்கியமாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் நேபாளை தற்காலிக புகலிடமாக பயன்படுத்தி வந்த நிலையில் அந்த வழியாக வளைகுடாவில் நுழையும் வழியும் அடைத்துள்ளது,இந்தியர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. இந்தியர்கள் வ‌ளைகுடா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு செல்ல NOC தேவையில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை தலையிட்டு வசதியை ஏற்படுத்தி கொடுத்ததன் அடிப்படையில் இந்தியர்கள் நேபாளம் வழியாக மற்ற நாடுகளுக்கு பயணித்து வந்த நிலையில்,அந்நாட்டு வெளியுறவுத்துறை புதிய முடிவை தற்போது வெளியாகியுள்ளது.

Add your comments to நேபாளம் வழியாக மற்ற நாடுகளுக்கு செல்ல இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது

« PREV
NEXT »