ஓமானில் இந்தியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது;இது தொடர்பான அறிவிப்பை சுப்ரீம் கமிட்டி அதிகாரப்பூர்வமாக உத்தரவு வெளியிட்டுள்ளது
Image: Beautiful Oman
ஓமானில் இந்தியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது;சுப்ரீம் கமிட்டி அதிகாரப்பூர்வமாக உத்தரவு வெளியிட்டுள்ளது
ஓமானில் ஏப்ரல் 24 முதல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து வருகின்ற ஓமான் சுப்ரீம் கமிட்டி அதிகாரப்பூர்வமாக உத்தரவு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஏப்ரல்-24,2021 முதல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் ஓமானுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கமிட்டி முடிவை மேற்கோள்காட்டி ஓமான் செய்தி நிறுவனம் நேற்று(21/04/21) புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
அதுபோல் இந்த புதிய முடிவு ஏப்ரல்-24 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும். மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரை இந்த முடிவு நடைமுறையில் இருக்கும். இருப்பினும், ஓமானி குடிமக்கள், தூதுவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.