குவைத்தில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது
குவைத்தில் மரணமடையும் முஸ்லிம் அல்லாத இந்து மதம் உள்ளிட்ட பிறமத நம்பிக்கையுள்ள நபர்களில் உடலைகளை அவர்களின் மத நம்பிக்கையின்படி தகனம்(எரிக்க) செய்ய மின் மயானம்(Electric Crematorium) பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையி்ல் அது குறித்து சம்மந்தப்பட்ட துறை பதில் அளித்து அறிக்கையினை வெளியிட்டுள்ளது என்று உள்ளூர் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
குவைத் நகராட்சியின் Funeral affairs Department இயக்குநர் டாக்டர் பைசல் அல்-அவாடி கூறுகையில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் அவர்களின் மத நம்பிக்கையின்படி இறுதி சங்குகள் செய்து உடலை புதைக்க குவைத் நாடு அனுமதிக்கிறது எனவும், மேலும் புத்த மதங்களை சேர்ந்தவர்கள் இறந்தால் கூட சடங்குகளை செய்து அவர்கள் முறைப்படி அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார். ஆனால் உயிழக்கும் நபர்களின் இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு உடல்களை தகனம்(எரிக்க) செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை நிராகரிக்கிறோம் என்றார்.
மேலும் இறந்த நபரின் மதம், பாலினம் அல்லது தேசியம்(நாடு) ஆகியவை என்ன என்பதை பார்க்காமல் அனைத்து வித மரியாதையுடன் இந்த கோரிக்கையினை மறுக்கிறோம் எனவும்,உடலை தகனம் செய்ய விரும்பும் நபர்கள் தங்கள் நாட்டுகளுக்கு உடலை எடுத்துச் சென்று அங்கேயே தகனம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார், அதுபோல் குவைத் 1980-களின் முற்பகுதியிலிருந்து தகனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது இன்றுவரை இந்த நடைமுறையினை கடைபிடித்து வருகிறது எனவும், குவைத் ஒரு இஸ்லாமிய நாடு என்பதால் அந்த நேரத்தில் விதிக்கப்பட்ட இந்த தடை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார் எனவும் செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.