குவைத்தில் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்த திட்டம் என்ற தகவல் வெளியாகியுள்ளது;உள்ளூர் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
Image : KuwaitCity Road
குவைத்தில் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்த திட்டம் என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று உயர் மட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி உள்ளூர் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் தற்போதைய பகுதி ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் அமைச்சரவை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் உயர்த்து வருகின்ற நிலையில் தினசரி கோவிட் இறப்புகள், நோய்த்தொற்றுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தால் ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈத் அல் பித்ர் வரை இது தொடரும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.