BREAKING NEWS
latest

Thursday, April 8, 2021

குவைத்தில் நடுத்தர கம்பெனிகளின் விசா ஒரு வருடம் கழித்து மாற்ற அனுமதி

குவைத்தில் நடுத்தர கம்பெனிகளின் விசா ஒரு வருடம் கழித்து மாற்ற அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

குவைத்தில் நடுத்தர கம்பெனிகளின் விசா ஒரு வருடம் கழித்து மாற்ற அனுமதி

குவைத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பதிலாக பணி அனுமதி(Work Permit) வழங்கப்பட்டு ஒரு வருடம் கழித்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு(Small to Medium Enterprises) இடையே தொழிலாளர்கள் தங்கள் பணி அனுமதிப்பத்திரத்தை மாற்ற அனுமதிக்கும் முடிவை எடுத்து அமைச்சரவை ஆணை பிறப்பித்துள்ளதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் டாக்டர் அப்துல்லா அல் சல்மான் அறிவித்தார் என்று தினசரி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

பணி அனுமதி(Work Permit) மாற்றப்படுவதற்கு, முதலாளியின் ஒப்புதல் தேவை. முடிவுக்கு முன்னர், SME பணி அனுமதி பெற்றவர்கள் பணி அனுமதி வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் வேலைகளை மாற்ற முடியும். ஒரு SME இன் கீழ் பணி அனுமதி பதிவு செய்யப்பட்ட நபர்கள் அதை அரசாங்கத்துறைக்கு மாற்றுவதற்கும், SME அல்லாத தனியார் துறை நிறுவனங்களுக்கும் மாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து நாடு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர் சந்தையில் அது கொண்டு வந்த மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர் அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add your comments to குவைத்தில் நடுத்தர கம்பெனிகளின் விசா ஒரு வருடம் கழித்து மாற்ற அனுமதி

« PREV
NEXT »