BREAKING NEWS
latest

Monday, April 12, 2021

சவுதிக்கு நாளை செல்ல வேண்டிய 650 ற்கும் மேற்பட்ட நபர்கள் NOC கிடைக்காமல் நேபாளில் சிக்கித்தவிப்பு

சவுதிக்கு நாளை செல்ல வேண்டிய 650 ற்கும் மேற்பட்ட நபர்கள் NOC கிடைக்காமல் நேபாளில் தவித்து வருகின்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image : இந்திய தூதரத்தின் முன்பு

சவுதிக்கு நாளை செல்ல வேண்டிய 650 ற்கும் மேற்பட்ட நபர்கள் NOC கிடைக்காமல் நேபாளில் சிக்கித்தவிப்பு

இந்தியாவில் இருந்து சவுதிக்கு செல்ல தற்காலிக புகலிடமாக நேபாளில் தங்கியுள்ள நபர்களில் நாளை சவுதிக்கு செல்ல வேண்டிய 700 ற்கும் மேற்பட்ட நபர்களில் 80 சதவீதம் நபர்களுக்கும் NOC கிடைக்காத காரணத்தால் ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் செலவு செய்து நேபாளம் சென்ற இவர்கள் நாளை சவுதி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் தேதி வரையில் அங்குள்ள இந்திய தூதரகத்தில் NOC பெறுவதற்கு நேரடியாக செல்லும் நடைமுறை பின்பற்றப்பட்ட நிலையில் 10ஆம் தேதி முதல் இந்திய தூதரகம் அறிமுகம் செய்த மின்னஞ்சல் முகவரி வழியாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும் இதன் பிறகு தூதரகம் சார்பில் பதில் அனுப்பப்படும் நபர்களுக்கு மட்டுமே NOC வழங்கபடுகிறது. நாளை சவுதிக்கு 3 விமானங்களில் 700 பேர் வரையில் பயணிக்கவுள்ள நிலையில் 35 நபர்களுக்கு மட்டுமே இன்று NOC கிடைத்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து விமான பயணச்சீட்டு எடுத்துள்ள மீதியுள்ள அனைவரும் நாளை சவுதி கிளம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகாலை முதல் தூதரக வாசலில் காத்திருந்த இவர்களை மாலையில் தூதரகம் நேரம் முடிந்து என்று கூறி, அங்கிருந்த பாதுப்பு அதிகாரிகளை வைத்து வெளியே அனுப்பி விட்டனர் எனவும், இதனால் நாளைய விமானத்தில் சவுதி திரும்ப முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக விமான பயணச்சீட்டு காசும் திருப்பி பெற முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளதாக அனைவரும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு நபரும் 40,000 முதல் 50,000 வரையிலாக பெரும் தொகையினை விமான பயணச்சீட்டு கட்டணமாக செலுத்தி உள்ளனர்.

Add your comments to சவுதிக்கு நாளை செல்ல வேண்டிய 650 ற்கும் மேற்பட்ட நபர்கள் NOC கிடைக்காமல் நேபாளில் சிக்கித்தவிப்பு

« PREV
NEXT »