குவைத்தில் இன்று வியாழக்கிழமை முதல் புதிய பகுதிநேர ஊரடங்கு ஊத்தரவு நடைமுறையில் வருகின்றது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்
குவைத்தில் இன்று வியாழக்கிழமை முதல் புதிய பகுதிநேர ஊரடங்கு ஊத்தரவு நடைமுறையில் வருகின்றன
குவைத்தில் இன்று(08/04/21) வியாழக்கிழமை மாலை முதல் புதிய பகுதிநேர ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் வருகின்றன. அதன்படி இன்று முதல் வருகின்ற ஏப்ரல் 22 வரையில் இரவு 7:00 மணி முதல் அதிகாலை 5 :00 மணி வரையில் பகுதிநேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரிக் அல்-மிஸ்ராம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
அதேபோல் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் இரவு 7:00 முதல் அதிகாலை 3:00 வரையில் விநியோக(Delivery) சேவை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அதில் நேற்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இரவு 7:00 முதல் அதிகாலை 3:00 வரையில் விநியோக(Delivery) சேவை என்ற விதிமுறை வருகின்ற ரமலான் முதல்நாள் அன்றைய தினம் முதல் பின்பற்றப்படும் என்று மாநகர இயக்குனர் எம். அஹ்மத் அல்-மன்ஃபுஹி நேற்று தெரிவித்துள்ளார்.
அதுபோல் இன்றைய தினத்திலிருந்து இரவு 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை குடியிருப்பு பகுதிகளில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் வாகனங்கள் பயன்படுத்தக்கூடாது. மேலும் இரவு 7:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை முன் அனுமதி(Online Appointment) முறை மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இணை கடைகளில் இருத்து ஷாப்பிங் செய்யலாம். இதற்கிடைய நாட்டில் கோவிட் பரவுவது தீவிரமடைந்தால் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் முழுமையான ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.