இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்கின்ற பயணிகளுக்கு நாளை மறுநாள் வியாழக்கிழமை முதல் புதிய விதிமுறைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது
Image : Dubai Airport
இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்கின்ற பயணிகளுக்கு நாளை மறுநாள் வியாழக்கிழமை முதல் புதிய விதிமுறை
இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகளுக்கான கோவிட் ஸ்கிரீனிங் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ தளத்தின் வழியாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் மாதிரிகள் வழங்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறையான பி.சி.ஆர் பரிசோதனை முடிவை பயணத்தின் பொது வழங்க வேண்டும்.
Image credit: Air India Express
பயணிகள் மாதிரிகள் சோதனைக்காக சேகரிக்கப்பட்ட தேதி,நேரம்,சோதனை முடிவு கிடைத்த தேதி, நேரம் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பயணிகள் உறுதிப்படுத்தவும் கேட்கப்படுகிறார்கள். எதிர்மறையாக சோதனை முடிவு சான்றிதழ் ஆங்கிலம் அல்லது அரபியில் தெளிவாக பதிவு செய்யப்பட வேண்டும். சோதனை முடிவு புறப்படும் இடத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும்,அதுபோல் QR குறியீடு(QR Code) சோதனை முடிவில் சேர்க்கப்பட வேண்டும். அதிகாரிகள் அதை ஸ்கேன் செய்து சோதனை முடிவுகளை எளிதாக சரிபார்க்கவும் முடியும். பயணி புறப்படுகின்ற விமான நிலைய அதிகாரிகள் மற்றும் துபாய் விமான நிலையத்தில் சுகாதார ஆணைய அதிகாரிகளும் அறிக்கை குறித்து ஆய்வு செய்வார்கள்.இந்த புதிய நிபந்தனை ஏப்ரல்-22,2021 முதல் அமலுக்கு வருகின்றது. அதாவது நாளை மறுநாள் வியாழக்கிழமை முதல் நடைமுறையில் வருகின்றன என்பது குறி்ப்பிடத்தக்கது.