ஓமானில் இருந்து தாயகம் திரும்ப விமான நிலையம் செல்கின்ற பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை இன்று வியாழக்கிழமை விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்
Image credit: Oman Air
ஓமானில் இருந்து தாயகம் திரும்புகின்ற பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை இன்று விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்
ஓமானில் தற்போது இரவு நேரத்தில் பகுதிநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஓமான் விமான நிலைய அதிகாரிகள் இன்று(01/04/21) வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அந்த அறிக்கையில் நீங்கள் தாயகம் திரும்புவதற்கான விமான பயணச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் காட்டினால் ஊரடங்கு கட்டுபாட்டில் இருந்து விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்படிப்பட்ட பயணிகள் எந்த காரணத்திற்காகவும் அதிகாரிகளால் எங்கும் தடுத்து வைக்கப்படுவதில்லை அல்லது நீண்டநேர சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை எனவும் எனவே, நள்ளிரவில் தாயகம் புறப்பட விமான பயணச்சீட்டு எடுத்துள்ள நபர்கள் யாரும் பகுதிநேர ஊரடங்கு தொடங்குகின்றன 8 மணிக்கு முன்னதாக விமான நிலையத்திற்கு முன்கூட்டியே செல்ல வேண்டியதில்லை எனவும்,திட்டமிட்ட நேரத்தில் மட்டுமே விமான நிலையங்களுக்கு வருவது போதுமானது என்றும் விமான நிலைய அதாகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதுபோல் பயணிகளை விமான நிலையத்தில் விட்டு திரும்புகின்ற ஓட்டுநர்கள் விமான பயணச்சீட்டு நகல் ஒன்றை பணியிடம் இருந்து பெற்று கைவசம் வைத்திருப்பது நல்லது.