சவுதிக்கு நுழைய தற்காலிகமாக ஓமான் வருகின்ற வெளிநாட்டினர் இனிமுதல் ஓமானில் நுழைய முடியாது என்ற புதிய செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது
சவுதிக்கு நுழைய தற்காலிகமாக ஓமான் வருகின்ற வெளிநாட்டினர் இனிமுதல் ஓமானில் நுழைய முடியாது
ஓமன் சுப்ரீம் கவுன்சில் இன்று(05/04/21) அதிரடியாக முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் முக்கியமான ஒன்று ஏப்ரல் 8 முதல், குடியுரிமை(Civil Id) அட்டை கொண்ட குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள்(அதாவது அங்கு ஏற்கனவே வேலை செய்து Residence விசா கைவசம் உள்ளவர்கள்) மட்டுமே ஓமானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அதுபோல் வேறு நாடுகளுக்கு செல்கின்ற பயணிகள்(இணைப்பு விமானங்கள் மூலம் வருகின்ற பயணிகள்) ஓமன் விமான நிலையங்கள் வழியாக மட்டுமே பயணிக்க முடியும் என்றும் நாட்டின் உள்ளே நுழைய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு ஏப்ரல் 8 மதியம் 12:00 மணிக்கு நடைமுறையில் வரும், எனவே அதன் பிறகு ஓமன் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களில் ஓமன் அடையாள அட்டை(Civil Id) வைத்திருப்பவர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனவே இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகின்ற பயணிகள் சவுதியில் நுழைய 14 நாட்கள் தற்காலிக புகலிடமாக ஓமனை பயன்படுத்த முடியாது என்பது உறுதியாகியுள்ளது. சுருக்கமாக சொன்னால் ஓமானில் நுழைய Visit Visa கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே இனிமேல் புதிதாக இந்தியாவிலிருந்து ஓமனில் நுழைந்து தற்காலிக புகலிடமாக அங்கு தங்கியிருந்து பி.சி.ஆர் சான்றிதழ் பெற்று சவுதியில் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனிமுதல் நேபாளம் மற்றும் பஹ்ரைன் நாடுகளை தேர்வு செய்துக்கொள்வது நல்லது. அதிலும் பஹ்ரைன் குறிபிட்ட சில தகுதியிலான சவுதி விசா கைவசம் உள்ளவர்களுக்கு மட்டுமே தற்காலிக நுழைவு விசாவை வழங்குகின்றது. ஆனால் தற்பொழுது ஓமனில் தங்கியுள்ள நபர்கள் சவுதி வருவதற்கு பிரச்சனை இருக்காது.