குவைத் அமைச்சரவையின் இன்றைய முக்கிய முடிவுகள் அறிவிப்பு;ஊரடங்கு தொடரும் நேரத்தில் மாற்றம்,வெளிநாட்டவர் நுழைய தடை தொடரும்
குவைத் அமைச்சரவையின் இன்றைய முக்கிய முடிவுகள் அறிவிப்பு
குவைத்தில் பகுதிநேர ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று இன்று(01/04/21) வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் முசிம் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது நடைமுறையிலுள்ள பகுதிநேர ஊரடங்கு வருகின்ற ஏப்ரல் 7,2021 அன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய பகுதிநேர ஊரடங்கு ஏப்ரல் 8, 2021 வியாழக்கிழமை முதல் ஏப்ரல் 22,2021 வரையில் மீண்டும் நடைமுறையில் இருக்கும். அதுபோல் அன்று முதல் பகுதிநேர ஊரடங்கு உத்தரவு இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும். அதுபோல் ரமலான் மாதத்தில் பகுதிநேர ஊரடங்கு நேரத்தில் உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களுக்கு விநியோக சேவைகள் இரவு 7 மணி முதல் அதிகாலை 3 மணி வரை அனுமதிக்கப்படும் என்று அவர் அறிவித்தார். இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை வாகனங்கள் பயன்படுத்தாமல் குடியிருப்பு பகுதிகளில் மட்டுமே பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
அதுபோல் முன்பதிவு முறையின்படி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இணை சந்தைகளில் இருந்து இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஷாப்பிங் செய்ய அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார். அதுபோல் துணை பிரதமரும்,பாதுகாப்பு அமைச்சரும் மற்றும் கொரோனா அவசரக் குழுவின் தலைவருமான ஷேக் ஹமாத் அல் அலி கூறுகையில் பகுதிநேர ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது எனவும் ஊரடங்கு நேரத்தை குறைப்பதற்கான பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும்,நாட்டில் கொரோனா பரவலை குறைக்கவே இந்த பகுதிநேர ஊரடங்கு தொடர்ந்தும் அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதுபோல் மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரையில் வெளிநாட்டினர் நாட்டில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரையில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் அவர்களது வீட்டுப் பணியாளர்,நெருங்கிய உறவினர்கள் நாட்டின் கடல், நிலம் மற்றும் வான்வழி எல்லைகள் வழியாக நடைமுறையிலுள்ள கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றி நாட்டில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.அதே நேரத்தில் வெளிநாட்டவர்கள் நாட்டை(குவைத்தை) விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.