குவைத்தில் ரமலான் மாதத்தில் மசூதிகளில் தராவியா தொழுகைக்கு அனுமதி வழங்கப்படும் என்று இஸ்லாமிய விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது
குவைத்தில் ரமலான் மாதத்தில் மசூதிகளில் தராவியா தொழுகைக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
குவைத்தில் ரமலான் மாதத்தில் மசூதிகளில் தராவியா தொழுகைக்கு அனுமதி வழங்கப்படும் என்று இஸ்லாமிய விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அனுமதி ஆண்களுக்கான மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மசூதிகளில் வருகின்ற நபர்கள் கடுமையான கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டுத்தப்படுவார்கள். மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளில் கடுமையான கோவிட் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் முடிக்கப்பட்டது எனவும்,புனித ரமலான் மாதத்தை வரவேற்க நாடு தயாராக உள்ளது என்று அமைச்சகத்தின் துணைச் செயலாளர் ஃபரீத் இமாடி தெரிவித்துள்ளார்.
அதுபோல் கோவிட் சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பெண்களும்,குழந்தைகளும் வீட்டிலேயே தொழுகையினை செய்ய வேண்டும் எனவும், பெண்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ள பிரார்த்தனை அரங்குகள் தற்காலிகமாக ஆண்கள் தொழுகை செய்ய திறந்து விடப்படும் என்றும் அவர் கூறினார்.