கத்தாரிலிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு இனிமுதல் 350 ரியால் முதல் 500 ரியால் வரையில் பி.சி.ஆர் பரிசோதனை கட்டணமாக வசூலிக்கப்படும்
கத்தாரிலிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு இனிமுதல் செலவு அதிகரிக்கும்
கத்தார் சுகாதார நிலையங்கள்(பி.எச்.சி.சி) ஆனது வெளிநாட்டு பயணிகளுக்கான கோவிட் பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இதன் மூலம் கட்டாரிலிருந்து இந்தியாவுக்குச் செல்ல தேவையான பி.சி.ஆர் பரிசோதனைகளை இந்த மையங்களில் இருந்து இனிமுதல் பெற முடியாது. எனவே இந்த இலவச பி.சி.ஆர் பரிசோதனைகளை இடைநிறுத்துவது தாயகம் திரும்புகின்ற இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு மேலும் பயணச் செலவை அதிகரிக்கும்.
இதன் திடீர் அறிவிப்பு மூலம் பயணிகள் பி.சி.ஆர் சோதனைக்காக தனியார் சுகாதார மையங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான 350 கத்தார் ரியால் முதல் 500 ரியால் வரையில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோவிட் தொற்றுநோயால் நிதி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களுக்கு இது மேலும் பின்னடைவாக இருக்கும் என்று தொழிலாளர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் நாட்டில் கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில் சுகாதரத்துறை ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதால் தற்காலிகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் சுகாதார மையங்களில் இருந்து பி.சி.ஆர் மேற்கொள்ளப்படலாம் என்றும் பி.எச்.சி.சி. வெளியிட்டுள்ள செய்தியில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.இதற்கிடைய Bachelor நபர்களுக்காக(தொழிலாளர்களுக்கு) இரண்டு மையங்களில் இலவசமாக பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டாலும் வரும் நாட்களில் இந்த சேவையும் ரத்து செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.