சவுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ரமலான் பிறை பார்க்க மக்களுக்கு அறிவுத்தல் செய்யப்பட்டுள்ளது;இது தொடர்பான அறிவிப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது
Image: மாதிரி புகைப்படம் பழையது
சவுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ரமலான் பிறை பார்க்க மக்களுக்கு அறிவுத்தல் செய்யப்பட்டுள்ளது
புனித ரமலான் மாதத்தின் பிறை ஞாயிற்றுக்கிழமை(ஏப்ரல் 11, 2021) மாலை காண்பதற்காக சவுதி அரேபியா உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் முழுவதும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பிறை சாதாரண கண்களால் அல்லது தொலைநோக்கியின் மூலம் யார் பார்த்தாலும் அருகிலுள்ள நீதிமன்றத்தில் உடனடியாக அவர்கள் தங்களது சாட்சியங்களை பதிவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இப்படிப்பட்ட தகவல் நீதிமன்றத்தில் தெரிவிக்க முடியாத நபர்கள் பிறை பார்த்த தகவலை தனது பகுதியில் உள்ள பிராந்தியத்தின் தலைமை அதிகாரத்திற்கு அறிக்கையாக அளிக்க வேண்டும் எனவும், அது அவருக்கு அருகிலுள்ள நீதிமன்றத்தை அடைய உதவியாக இருக்கும் என்றும் நீதிமன்றம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாக சவுதி தினசரி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளது.