ஓமானில் மசூதிகளை தவிர அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மீண்டும் மூடப்பட்டுள்ளது;அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த புதிய உத்தரவு நடைமுறையில் இருக்கும்
Image : Oman Hindu Temple
ஓமானில் மசூதிகளை தவிர அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மீண்டும் மூடப்பட்டது
ஓமானில் கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மசூதிகள் தவிர அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நேற்று முதல் மூட மத விவகார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த புதிய உத்தரவு நடைமுறையில் இருக்கும் எனவும்,அதுபோல் வழிபாட்டுத் தலங்களின் வாயில்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு வெளிவந்த நிலையில் வீடுகள் மற்றும் வாடகை அரங்குகள் உட்பட தனியார் அல்லது பொது இடங்களில் குழு பிரார்த்தனைக் கூட்டங்களைத் தவிர்க்கவும், வீட்டிலேயே தங்கி தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் பிரார்த்தனை செய்ய புனித பீட்டர்-பால் கத்தோலிக்க தேவாலயத்தின் பாதிரியார் ரவுல் ராமோஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்களின் பாதுகாப்பிற்காக நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்து விசுவாசிகளும் இதை உறுதிப்படுத்த வேண்டும். மேலதிக அறிவிப்பு வரும் வரை ஓமானில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மூடப்படும் என்று அவர் கூறினார். இதுபோல் கோவில்களிலும் நிகழ்சிகள் மற்றும் பூஜைகள் உள்ளிட்ட எனவும் 2021 ஏப்ரல் 3 முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரையில் நிறுத்தி வைப்பதாக கோவில் நிர்வாகம் ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.