குவைத்தில் தடுப்பூசி சிறந்த முறையி்ல் பலனளிக்கிறது என்றும் தீவிர சிகிச்சை நோயாளிகள் மற்றும் பாதிக்கப்படும் முதியவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது
Image : குவைத் தடுப்பூசி மையம்
குவைத்தில் தடுப்பூசி சிறந்த முறையி்ல் பலனளிக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளிகளின் எண்ணிக்கையும் மற்றும் வைரஸால் பாதிக்கப்படும் முதியவர்களின் எண்ணிக்கையும் கடந்த இரண்டு வாரங்களாக குறைந்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து,நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடையே அதிகரித்துள்ளதே இதற்கு காரணமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் துவக்க நிலவரப்படி, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளின் எண்ணிக்கை 252 ஆக இருந்தது. பின்னர் இரண்டாவது நாளில் அது 241 ஆகவும், 3 ஆம் தேதி அது 239 ஆகவும், 4 ஆம் தேதி 224 ஆகவும், 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் 216 ஆகவும், நேற்று 207 ஆகவும் ஆகவும் குறைந்துள்ளது. இது நல்ல முன்னேற்றமாக கருதப்படுகிறது.
குவைத்தில் ஏற்கனவே ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதுபோல் சுமார் 12 லட்சம் பேர் தடுப்பூசி பெறுவதற்காக சுகாதரத்துறை வெளியிட்டுள்ள இணைய தளத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து தினமும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதால் கோவிட்டுக்கு எதிராக வரும் நாட்களில் சிறந்த முன்னேற்றம் நடத்த முடியும் என்று சுகாதரத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.