BREAKING NEWS
latest

Tuesday, April 6, 2021

ஓமானில் ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக மத்திய வங்கி பொதுமக்களை எச்சரிக்கை செய்து செய்தி வெளியிட்டுள்ளது

ஓமானில் ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக மத்திய வங்கி பொதுமக்களை எச்சரிக்கை செய்து விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது

Image credit: Central Bank of Oman

ஓமானில் ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக மத்திய வங்கி பொதுமக்களை எச்சரிக்கை செய்து செய்தி வெளியிட்டுள்ளது

ஓமானில் ஆன்லைன் மோசடிக்கு எதிராக ஓமான் மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான வெளியிட்டுள்ள செய்தியில் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு வங்கியிலிருந்தும் வாடிக்கையாளர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ள மாட்டார்கள் எனவும், உங்கள் Atm Password, Atm அட்டை எண்கள் மற்றும் வங்கி கணக்கு எண்(Account Number) போன்ற தகவல்களை கேட்டு யாராவது அழைத்தால் எந்தவொரு காரணத்திற்காகவும் அந்த மர்ம நபர்களிடம் தொலைபேசியில் இப்படிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் எனவும், இதுபோன்ற அழைப்புகள் அல்லது மொபைல் போன் குறுந்தகவல் செய்திகளை கண்டால் உடனடியாக அருகிலுள்ள ராயல் ஓமான் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இப்படிப்பட்ட மோசடிகள் ஓமானில் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Add your comments to ஓமானில் ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக மத்திய வங்கி பொதுமக்களை எச்சரிக்கை செய்து செய்தி வெளியிட்டுள்ளது

« PREV
NEXT »