குவைத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் பெயரில் போலி தொலைபேசி அழைப்புகள்,ஏமாற வேண்டாம் என்று தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
Image : Kuwait Indian Embassy
குவைத்தில் இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது;தூதரக அதிகாரிகள் பெயரில் போலி தொலைபேசி அழைப்புகள்
குவைத்தில் இந்தியர்களிடம் இருந்து பணம் பறிக்க தூதரக அதிகாரிகள் பெயரில் போலியான அழைப்புகள் மூலம் முயற்சிகள் நடைபெற்று வருவதாக குவைத்திலுள்ள இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது. இதில் முக்கியமான ஒன்று மோசடிக்கு அவர்கள் பயன்படுத்தும் எண்கள் தூதரகத்தின் பயன்பாட்டில் உள்ள லேண்ட்லைன் எண்களின் குளோனிங் செய்யப்பட்ட எண்களும் அடங்கும் என்பதாகும். எனவே நம்பரை பார்த்து தூதரக அதிகாரிகள் என்று ஏமாற வேண்டாம்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக தூதரகத்திற்கு பல புகார்கள் வந்துள்ளன. தூதரகம் தொலைபேசியின் வழியாக தனிப்பட்ட முறையில் பணம் அல்லது வங்கி தகவல்களை கேட்பதில்லை. தூதரகம் தொடர்பான நடவடிக்கைகள்(சேவைகள்) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://www.indembkwt.gov.in/) விவரிக்கப்பட்டுள்ளன.எனவே, இதுபோன்ற அழைப்புகளைப் பெறும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மோசடிக்கு ஆளாகக்கூடாது என்றும் தூதரகம் மக்களை வலியுறுத்தியது. இதுபோன்ற விஷயங்களை உடனடியாக hoc.kuwait@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம்.