இந்தியாவுக்கு உதவி செய்ய குவைத் அரசாங்கம் முடிவு;இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது
இந்தியாவுக்கு உதவி செய்ய குவைத் அரசாங்கம் முடிவு;இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது
இந்தியாவில் கோவிட் பரவல் தீவிரமடைவதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட குவைத் முடிவு செய்துள்ளது. இன்றைய(26/04/21) அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.மேலும் மரபணு மாற்ற கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து இந்திய மக்களின் உடல்நலம் மோசமடைந்து வருவது குறித்து கூட்டத்தில் அமைச்சரவை தங்கள் ஆழ்ந்த கவலையையும்,வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் இந்தியாவுக்கு அவசரகால அடிப்படையில் ஆக்ஸிஜன் மற்றும் பிற சிகிச்சைக்காக உபகரணங்கள் அனுப்ப குவைத் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும்,இந்த நெருக்கடியான சூழ்நிலையை நட்பு நாடான இந்தியா சமாளித்து அதிலிருந்து விட்டுட்டு கடந்து வரட்டும் என்று குவைத் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் உணர்ச்சிபூர்வமான தெரிவித்துள்ளார்.