குவைத்திற்கு தற்போதுள்ள நிலைமையில் வெளிநாட்டினர் வேலைக்காக திரும்புவது மேலும் தாமதமாகும் என்ற தகவலை சுகாதரத்துறை அதிகாரிகள் தெரிவி்த்தனர்
Image : Kuwait Airport
குவைத்திற்கு தற்போதுள்ள நிலைமையில் வெளிநாட்டினர் திரும்புவது மேலும் தாமதமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் கொரோனா பரவல் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் குடிமக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதை விட அதிகமான அளவில் வெளிநாட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் குவைத்துக்கு வெளிநாட்டவர்கள் திரும்புவது மேலும் தாமதமாகும் என்று சுகாதரத்துறை அதிகாரிகள் தெரிவி்த்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் கோவிட் வெடிப்பின் தற்போதைய விகிதம் பெரும் கவலை அளிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக கோவிட் பரவுவது சீராக இருந்தபோதிலும், ரமலான் மாதத்தில் கோவிட்டுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், மே மாதத்தின் நடுப்பகுதி வரை வெளிநாட்டவர்கள் குவைத்துக்கு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த ஏப்ரல் முதல் 9 நாட்களில் புதிதாக குவைத்தில் 10804 கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளது அதுபோல் 74 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இதுபோல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் தேவை அதிகமாக உள்ள சூழ்நிலையில் மூன்றாவது தொகுப்பு(Batch) நாட்டிற்கு வருவது தாமதமாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை விரைவாக பெறுவதற்காக சுகாதார அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கூடுதலாக, மொடெனா மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளை பயன்படுத்துவது குறித்து,தகுதி ஆய்வு வல்லுநர்கள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர் என்ற தகவலையும் சுகாதரத்துறை தெரிவித்துள்ளதாக செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.