அமீரக அரசு புனித ரமலான் மாதத்தில் 20 நாடுகளில் உள்ள ஏழை நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு 10 கோடி உணவு பொட்டலங்களை வழங்க தீர்மானித்துள்ளதாக துபாய் ஆட்சியாளர் அறிவிப்பு
Image : துபாய் ஆட்சியாளர்
அமீரக அரசு புனித ரமலான் மாதத்தில் 20 நாடுகளில் உள்ள ஏழை நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு 10 கோடி உணவு பொட்டலங்களை வழங்க தீர்மானித்துள்ளது
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இன்று(11/04/21) ஞாயிற்றுக்கிழமை இந்த திட்டத்தை தொடங்குவதாக அறிவித்தார். உலகெங்கிலும் உள்ள பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு உதவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதாபிமான கொள்கைகளை இது பிரதிபலிக்கிறது. இந்த திட்டம் இனம், மதம்,நாடு என்று பாகுபாடு பார்க்காமல் உலகெங்கிலும் உள்ள குறிப்பாக இந்த கொரோனா பிரச்சனை துவங்கிய பின்னர் வேலையின்மை, பஞ்சம் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமையிடமாக கொண்ட முகமது பின் ரஷீத் அல் மக்தூம் குளோபல் இன்ஷியேட்டிவ்ஸ்( MBRGl ) இதை ஏற்பாடு செய்துள்ளது. கோவிட் -19 பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்காக 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தால் உள்நாட்டில் தொடங்கப்பட்ட 10 மில்லியன் உணவு என்ற திட்டமே தற்போது விரிவடைந்து 100 மில்லியன் உணவு திட்டமாக வளர்ந்து நிற்கிறது. முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மனிதாபிமான மற்றும் தொண்டு ஸ்தாபனம், உணவு வங்கி பிராந்திய வலையமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு, பயனாளர் நாடுகளில் உள்ள மனிதாபிமான அமைப்புகள், அமீரக ஃபேடரல் அமைப்பு மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து முகமது பின் ரஷீத் அல் மக்தூம் குளோபல் இன்ஷியேட்டிவ்ஸ்( MBRGl ) இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.