குவைத்தின் Mahboula பகுதியில் இயங்கிவந்த 3 மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு;2 பேர் கைது செய்யப்பட்டனர் என்ற தகவலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்
Image : கள்ளச்சாராய தொழிற்சாலை
குவைத்தின் Mahboula பகுதியில் இயங்கிவந்த 3 மதுபான தொழிற்சாலை;2 பேர் கைது செய்யப்பட்டனர்
குவைத் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சக பொது நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் நாட்டில் நடக்கின்றன குற்றங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர் எனவும், அதன் ஒரு பகுதியாக அஹ்மதி Governorate பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு ஆசியா நாட்டவரை கைது செய்தனர் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.
Mahboula பகுதியில் சட்டவிரோதமாக குடியிருப்பு பகுதிகளில் இயங்கிவந்த 3 கள்ளச்சாராய உற்பத்தி தொழிற்சாலைகளை கண்டுபிடிக்க முடிந்தது எனவும்,அங்கிருந்து 86 பீப்பாய் அளவுக்கு கள்ளச்சாராய கலவைகள், விற்பனைக்குத் தயாரான 310 பாட்டில்கள் கள்ளச்சாராயம் நிரப்பப்பட்ட பாட்டில்கள் ,5 வடிகட்டுதல் சாதனங்கள், ஒரு அமுக்கி மற்றும் 3 ஃபுமிகேட்டர்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன எனவும்,மேலும் கைது செய்யப்பட்ட 2 நபர்களின் மீது தேவையான கூடுதல் சட்ட நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட போதை தடுப்புப்பிரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.