ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இந்தியர்களுக்கு தடையை நீட்டித்துள்ளது;மே-14 வரை தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இந்தியர்களுக்கு தடையை நீட்டித்துள்ளது
மரபணு மாற்ற கொரோனா பரவல் இந்தியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் இருந்து மக்கள் தங்கள் நாட்டில் நுழைவதற்கான தடையை திடிரென அறிவித்தது. இப்படி அறிவிக்கப்பட்டுள்ள தடையினை அந்நாடு மேலும் நீட்டிப்பு செய்து இரவு புதிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் இந்தியர்கள் நுழைவுத் தடையை நீட்டித்துள்ளது எனவும், வருகின்ற மே-14 வரை இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய முடியாது எனவும், மே-4 ம் தேதி முடிவடையவிருந்த நுழைவுத் தடை மேலும் பத்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும், இது தொடர்பாக பல்வேறு விமான நிறுவனங்கள், பயண முகவர்( ஏஜென்சி) நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.