ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பிய யூசுப் அலி அவர்கள் அபுதாபி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அனுப்பிய சிறப்பு விமானத்தில் அபுதாபிக்கு திரும்பினார்
Image: அபுதாபி புறப்பட்ட காட்சி
ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பிய யூசுப் அலி அவர்கள் அபுதாபி திரும்பினார்
ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பிய எம்.ஏ.யூசுப் அலி மற்றும் அவரது மனைவி இன்று காலை கொச்சியில் இருந்து ஒரு சிறப்பு விமானத்தில் அபுதாபிக்கு திரும்பியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்த விமானத்தை அபுதாபி அரச குடும்பத்தினர் அனுப்பியுள்ளனர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. அபுதாபில் வைத்து நடத்தபடும் அடுத்தகட்ட பரிசோதனையில் தொடர் சிகிச்சை தேவை என்றால் அபுதாபியில் நடத்தபடும். தொழிலதிபர் யூசுப் அலி மற்றும் அவரது மனைவியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக சதுப்பு நிலத்தில் நேற்று தரையிறங்கியது.இந்த விபத்தில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்தைத் தொடர்ந்து யூசுப் அலி மற்றும் அவரது மனைவி எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இருவரின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பினர். தற்போது அவர் அவருடைய அபுதாபி வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றனர். LuLu குழுமத்தின் விமானங்கள் உள்ளிட்டவையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் டெல்லியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவின் மேற்பார்வையில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டது சுமார் நான்கு மணி நேரம் நீடித்த இந்த மீட்புப்பணி இன்று திங்கள்கிழமை அதிகாலையில் முடிந்தது. அந்த இடத்தில் அதிக மக்கள் கூட்டம் இருந்ததால் ஹெலிகாப்டர் லிப்ட் பணி இரவுக்கு ஒத்திவைக்கப்பட்டது. காவல்துறையினர் அந்த இடத்தில் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தியிருந்தனர். அவசர அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர் இன்று காலை மீட்கப்பட்டு நெடும்பசேரி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.