குவைத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நேற்று வரையில் 75 பேர் தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் இந்த ஆண்டு நேற்று வரையில் 75 பேர் தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நேற்று(29/05/21) வரையில் 75 பேர் தற்கொலை வழக்குகளில் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இந்தியா உள்ளிட்ட ஆசியா நாடுகளை சேர்ந்தவர்கள் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 2020-ஆம் ஆண்டில், நாட்டில் பதிவாகியுள்ள மொத்தம் தற்கொலை வழக்குகளின் எண்ணிக்கை 90 மட்டுமே எனவும், எனவே புதிய புள்ளிவிபர கணக்குகளை ஒப்பிடுகையில் முந்தைய ஆண்டை விட 50 சதவீதம் தற்கொலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
அதுபோல் இந்த ஆண்டு 9 தற்கொலை முயற்சிகள் தொடர்பான வழக்குகளும் பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் தற்கொலை வழக்குகளின் விகிதத்தை அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவல் மூலம் ஏற்பட்ட உளவியல் மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்புகள் காரணமாக பலருக்கும் வேலை இழப்புகள் ஏற்பட்ட நிலையில் தானாகவே தங்களுடைய வாழ்கையினை முடித்துகொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது வேதனைக்குரிய யதார்த்தம் ஆகும்.