கத்தாரில் கொரோனா கட்டுபாடுகள் மீறிய 960 பேர் கைது;ஒரு காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தவிர 4 பேருக்கு மேல் பயணிக்க கூடாது என்று அறிவுத்தல் செய்யப்பட்டுள்ளது
Image : Qatar Police
கத்தாரில் கொரோனா கட்டுபாடுகள் மீறிய 960 பேர் கைது;அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது
கோவிட்டின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறியதற்காக கத்தாரில் பொலிசார் 961 பேரை கைது செய்தனர். பல்வேறு வகையான கொரோனா விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:
- வெளியே சென்றபோது முகமூடி அணியாத குற்றத்திற்காக 510 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பூங்காக்கள் மற்றும் கார்னிச்களில் கூட்டமாக வந்ததற்காக 180 பேரும்
- சமூக இடைவெளி தூரத்தை பின்பற்றாத குற்றத்திற்காக 260 பேரும் கைது செய்யப்பட்டனர்.
- மொபைலில் இஹ்திராஸ் பயன்பாட்டு செயலியை பதிவிறக்கம் செய்யாததற்காக பேர் கைது செய்யப்பட்டனர்.
- வீட்டுத் தனிமைப்படுத்தல் மீறிய ஒருவர்
- அனுமதிக்கப்பட்டதை விட அதிகமானவர்களை காரில் ஏற்றிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளிடம் கூடுதல் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் கத்தாரில் தற்போதைய சூழ்நிலையில் வீட்டைவிட்டு வெளியேறும்போது முகமூடி அணிவது கட்டாயமாகும். கோவிட் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஒரே குடும்ப உறுப்பினர்களை சேர்ந்தவர்கள் தவிர, நான்கு பேருக்கு மேல் ஒரு காரில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணியாதது தொடர்பான விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது 1990 ஆம் ஆண்டு சட்ட எண்-17 யின் கீழ் தொற்று நோய் தடுப்பு பிரிவின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.