குவைத்தில் தொழிலாளர்களின் இடமாற்றம்;மனிதவளத்திற்கான பொது ஆணையம் முக்கியமான உத்தரவை வெளியிட்டுள்ளது
குவைத்தில் தொழிலாளர் இடமாற்றம்;மனிதவளத்திற்கான பொது ஆணையம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது
குவைத்தில் தொழிலாளர்களின் இடமாற்றம் தொடர்பான மனிதவளத்திற்கான பொது ஆணையம் முக்கியமான உத்தரவை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பணி அனுமதி(Work Permit) வழங்கப்பட்ட தேதியில் இருந்து,ஒரு வருடம் கழித்து தொழிலாளர் துறை அலுவகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள(அதிகாரப்பூர்வமான பதிவு செய்துள்ள) முதலாளிகளுக்கு பணி அனுமதி உள்ள தொழிலாளர்களின் Work Permit மாற்றி(transfer) வழங்குவதற்கு முடியும் என்று குவைத் மனிதவளத்திற்கான பொது ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவிட் பரவலை அடுத்து முதலாளிகள் தொழிலாளர்களை கைமாற்றம் செய்வது தொடர்பாக அதிகாரசபையின் இயக்குநர் ஜெனரல் அகமது அல் மௌசா பிறப்பித்த உத்தரவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களின் இந்த இடமாற்றம் முதலாளியின் ஒப்புதலுக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சம்பந்தப்பட்ட அதிகாரசபையின் பிற விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளும் பொருந்தும். குவைத்தில் தற்போதைய சூழ்நிலையில் தொழிலாளர் துறையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் தேவைகளின் வெளிச்சத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அகமது அல் மௌசா கூறினார். மேலும் மற்றோரு அறிவிப்பு வரும் வரை இந்த முடிவு நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.