குவைத்தில் 2 வயது சிறுமி மரணமடைந்த சம்பவம்;பணிப்பெண் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன
குவைத்தில் 2 வயது சிறுமி மரணமடைந்த சம்பவம்;பணிப்பெண் கைது செய்யப்பட்டார்
குவைத்தில் இரண்டு வயது சிறுமியின் மரணம் தொடர்பாக வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் நேற்று சபா அல் நாசர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 வயது குவைத் சிறுமி ஒருவர் இறந்து கிடந்தார் எனவும், விசாரணையின் ஒரு பகுதியாக வீட்டுப் பணிப்பெண் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குவைத் உள்துறை அமைச்சகத்தின் அவசரகால செயல்பாட்டு அறைக்கு இரண்டு வயது சிறுமி இறந்ததாக தகவல் கிடைத்தது எனவும், சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவர்கள் விரைந்து வந்தனர்.
மரணமடைந்த சிறுமியின் உடல் விரிவான ஆய்வுக்காக தடயவியல் துறை மருத்துவமனைக்கு மாற்றினர். இந்த மரணத்தில் வீட்டுப் பணிப்பெண் சம்பந்தப்பட்டாரா என்பது குறித்து கைது செய்து விசாரணை நடந்து வருகிறது எனவும் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பணிப்பெண் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்தவர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட பணிப்பெண்ணிடம் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுமி கழுத்தில் கயிற்றை சுற்றி விளையாடிய நிலையில் எதிர்பாராமல் இந்த விபத்து நடந்ததாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர்,இதேபோல் ஒரு குவைத் குழந்தை வாளியில் வைத்திருக்க தண்ணீரில் தலைகுப்புற விழுந்து மரணமடைந்த சம்பவம் தொடர்பான பணிப்பெண் கைது செய்யப்பட்டு விசாரனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட செய்தியை யாரும் மறந்திருக்க வாய்பில்லை. தடயவியல் தொடர்பான கூடுதல் அறிக்கைகள் கிடைத்த பிறகு,கூடுதல் சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.