ஓமானில் வெறுக்கத்தக்க பதிவுகளை வெளியிட்ட இந்தியாவை சேர்ந்த பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
ஓமானில் வெறுக்கத்தக்க பதிவுகளை வெளியிட்ட இந்தியாவை சேர்ந்த பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்
ஓமானில் தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் வெறுப்பு பதிவுகளை வெளியிட்ட இந்திய ஆசிரியர் ஒருவர் வேலை இழந்துள்ளார். அந்நாட்டின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக சம்பந்தப்பட்ட நபர் வேலை செய்துவந்தார். சுதிர் குமார் சுக்லா என்ற அந்த நபரை ஓமன் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் பணிநீக்கம் செய்தனர்.
இது தொடர்பான வெளியாகியுள்ள செய்தியில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆதரவாகவும்,இஸ்ரேல் ஆதரித்தும் அவர்பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டார் எனவும் இதற்கு மாணவர்களும், அங்குள்ள மற்றவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பரவலான எதிர்ப்புக்கள் இருந்தபோதிலும் அவர் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்திக் கொண்டிருந்தார். இதையடுத்து கல்லூரியில் மாணவர்கள் அவரது வகுப்பை புறக்கணித்தனர். இதையடுத்து ஆசிரியரை பல்கலைக்கழக அதிகாரிகள் பணிநீக்கம் செய்தனர்.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அவர் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டார் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்தார். ஆனாலும் எதிர்ப்பு தணியாத காரணத்தால் அவர் தனது ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டார். அவர் இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் இதுபோன்ற வெறுக்கத்தக்க ட்வீட்களை வெளியிட்டிருந்தார் எனவும் மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.