குவைத் விமான போக்குவரத்து துறை சார்பில் இன்று காலையில் பயணங்கள் தொடர்பான முக்கியமான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
குவைத் விமான போக்குவரத்து துறை பயணங்கள் தொடர்பான முக்கியமான செய்தியை வெளியிட்டுள்ளது
குவைத் விமான போக்குவரத்து துறை இன்று(17/05/21) அதிகாலை வெளியிட்டுள்ள செய்தியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெறாத குடிமக்கள் நாட்டிற்கு வெளியே பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் குவைத் குடிமக்கள்,முதல்நிலை உறவினர்கள் அவர்களது வீட்டுத் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் அடங்குவார்கள்.இருப்பினும், கொரோனா வைரஸுக்கு எதிராக குவைத் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு இந்த புதிய விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல் வெளிநாட்டவர்கள் குவைத்தில் நுழைவதற்கான தடையும் தொடர்கிறது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அறிவிப்பு மே-22 சனிக்கிழமை தேதியிட்டு தடை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணத் தடையில் தடுப்பூசிகளைப் பெற வரையறை செய்யப்பட்ட வயதுக்கு உட்படாத நபருகள் அடங்கமட்டார்கள்.
அதுபோல் பயண கட்டுப்பாடுகளிலிருந்து பின்வரும் பிரிவுகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.(1) தடுப்பூசியின் இரண்டு டோஸையும் பெற்று இரண்டாவது டோஸிலிருந்து இரண்டு வாரங்கள் கடந்தவர்கள்.(2) தடுப்பூசியின் ஒரு டோஸ் பெற்று ஐந்து வாரங்கள் கடந்தவர்கள்.(3) கொரோனா வைரஸ் நோய்த்தொற்றிலிருந்து மீண்டு, தடுப்பூசியின் ஒரு டோஸைப் பெற்று, இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்டவர்கள் நபர்கள் ஆகியோர் அடங்குவர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.