குவைத் இந்தியாவுக்கான விமானங்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது;இந்த புதிய தடை உத்தரவு தற்காலிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
குவைத் இந்தியாவுக்கான விமானங்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது
இந்தியாவுக்கான நேரடியாக விமானங்களுக்கு குவைத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாலையில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் கோவிட் பரவலுக்கு மத்தியில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் தடை தற்காலிகமானது எனவும்,குவைத்தில் இருந்து இந்தியா செல்லும் அனைத்து பயணிகளுக்கும்,பிற நாடுகள் வழியாக பயணம் செய்பவர்களுக்கும் இந்த தடை பொருந்தும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கொரோனா கமிட்டியின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது எனவும்,அந்த சேவைகள் எப்போதும் போல தொடர்ந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான விமானங்களுக்கு தற்காலிக தடை முதல்கட்டமாக மே-10 வரையில் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Jazeera உள்ள விமான நிறுவனங்கள் டிராவல் ஏஜென்சிகளுக்கு இது தொடர்பான தகவலை அனுப்பியுள்ளனர்.