ஓமான் இந்தியா உள்ளிட்ட நாட்டவர்கள் நாட்டில் நுழைய காலவரையின்றி தடையை நீட்டித்து உச்சக்குழு பரிந்துரை அடிபடையில் உத்தரவு வெளியிட்டுள்ளது
ஓமான் இந்தியா உள்ளிட்ட நாட்டவர்கள் நாட்டில் நுழைய காலவரையின்றி தடையை நீட்டித்து உத்தரவை வெளியிட்டுள்ளது
ஓமான் இந்தியா,பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்தவர்களுக்கு பயணத் தடையை நீட்டித்துள்ளது. கோவிட் பரவலை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளில் இருந்து ஓமானுக்குள் நுழைவதற்கான தடையை அறிவித்து தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த புதிய உத்தரவில் சூடான், லெபனான், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, தான்சானியா, இங்கிலாந்து, எகிப்து, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், பங்களாதேஷ், கானா, கினியா, சியராலியோன், எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றும் 14 நாட்களுக்குள் இந்த நாடுகளில் பயணம் செய்தவர்களுக்கும் இந்தத் தடை பொருந்தும்.
ஓமான் உச்சக்குழு பரிந்துரையின் அடிப்படையில் வருகின்ற மே-7 முதல் இந்தத் தடை காலவரையின்றி நடைமுறையில் இருக்கும். அதுபோல் இந்தியாவில் இருந்து ஓமானுக்குள் நுழைவதற்கான தடை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு அறிவிப்பு வரும் வரையில் இந்த தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.