குவைத்தில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மூன்று வகையான நிறத்தில் உள்ள சான்றிதழ்கள் வழங்கபடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மூன்று வகையான சான்றிதழ்கள் வழங்கபடும்
குவைத்தில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் மூன்று வகையான சான்றிதழ்களை வழங்கும். தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டுமே பெறுபவர்களுக்கு ஆரஞ்சு நிற சான்றிதழ் வழங்கப்படும். அதேபோல் இரண்டு டோஸ் ஊசிக்கு முடித்தவர்களுக்கு பச்சை நிற சான்றிதழ் வழங்கப்படும். மேலும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றவர்களுக்கும் முன்றாவது வகையான பச்சை நிற சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் 'முனா' செயலி அல்லது வலைத்தளம் மூலம் பெறலாம்
இந்த சான்றிதழ் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பயணம் மற்றும் பிற பல்வேறுபட்ட சேவைகளுக்கு பயன்படுத்தலாம். தடுப்பூசி சான்றிதழில் தடுப்பூசி பேட்ச் எண், நபர் தடுப்பூசி போட்ட இடம் மற்றும் பாஸ்போர்ட் எண் ஆகியவை பதிவேற்றப்பட்டு இருக்கும். பல நாடுகள் தற்போது போலி சான்றிதழ்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பயணிகளுக்கு பி.சி.ஆர் சோதனை சான்றிதழ் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் ஏதேனும் பயணங்களில் பயன்படுத்த முடியும். இதன் காரணமாக தடுப்பூசி சான்றிதழ் வரும் நாட்களில் ஒரு முக்கியமான, தேவையாக ஆவணமாக மாறும் என்று தெரிகிறது.