குவைத்தில் தொழிலாளர்கள்(Bachelors) அறைகளில் நெருக்கமான தங்குவது கொரோனா பரவலுக்கு காரணமாகிறது
Image : செய்தியாக மட்டுமே
குவைத்தில் தொழிலாளர்கள்(Bachelors) அறைகளில் நெருக்கமான தங்குவது கொரோனா பரவலுக்கு காரணமாகிறது என்று சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளது
குவைத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள்(Bachelors) தங்கும் அறைகளில் அதிகமாக அளவிலான தொழிலாளர்கள் நெருக்கமாக தங்குவது கோவிட் பரவுவதற்கு காரணமாகிறது என்று சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளது. பல தொழிலாளர் குடியிருப்பில் 10 முதல் 16 பேர் வரையில் ஒன்றாக தங்கியிருப்பது கவனத்திற்கு வந்த நிலையில் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருவருக்கு நோய் பாதிப்பு அறிகுறிகள் இருந்தால் தற்போதைய சூழ்நிலையில் அதே இடத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது எனவும் விழிப்புடன் இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
கோவிட் பரவுவதற்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற இந்த சூழ்நிலையில், இதுபோன்ற அறைகளில் ஒருவனுக்கு காய்ச்சல் அல்லது சளி உள்ளிட்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டால் தற்போதைய சூழ்நிலையில்,அதே அறையில் தங்க வேண்டியது அவசியம் ஆகிறது மற்றும் சமூக இடைவெளி போன்ற கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற முடியாத காரியங்கள் மாறுகிறது ஒரு சிறிய அறையில் வசிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் காரணமாக கொரோனா நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும் என்றும், இந்த பிரச்சினையில் முதலாளிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழிலாளர்களுக்கு போதுமான சுத்தமான தங்குமிடங்களை வழங்குமாறு அதிகாரிகள் முதலாளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் பாதிப்பு விகிதம் குறைந்து வருகின்ற இந்த சூழ்நிலையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற அனைவரும் தயாராக வேண்டும் என்றும் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.