கேரளாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தமிழகத்தில் நுழைய பிரச்சனை இருக்காது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது
Image : TVM AIRPORT
கேரளாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தமிழகத்தில் நுழைய பிரச்சனை இருக்காது
கேரளாவில் மே-8 முதல் 16-ஆம் தேதி வரையில் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற நபர்களுக்கான பயணங்களில் குழப்பங்கள் நிலவிவந்த நிலையில், தற்போது கேரளா அரசு ஊரடங்கு காலத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அடங்கிய பட்டியலை இன்று(06/05/21) வெளியிட்டுள்ளது.அதில் விமான மற்றும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய விதிமுறையின்படி,விமான நிலையம் மற்றும் நீண்டதூர ரயில் பயணங்கள் மூலம் ரயில் நிலையங்களில் வந்திறங்கும் மற்றும் புறப்படும் பயணிகள்,பயணச்சீட்டு உள்ளிட்ட Validity ஆவணங்கள் கண்டிப்பாக கைவசம் வைத்திருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆன்லைன் டாக்ஸிகள் மூலம் தங்கள் இலக்குகளை அடைய முடியும். எனவே திருவனந்தபுரம் உள்ளிட்ட விமான நிலையங்களில் வந்திறங்கி தமிழகத்திற்கு செல்லும் பயணிகளுக்கு, ஊரடங்கு நேரத்தில் தாயகம் திரும்ப பிரச்சனை இருக்காது என்பது தெளிவாகியுள்ளது. அதே நேரத்தில் எல்லையினை கடந்து தமிழகத்தில் நுழைய தமிழக அரசு அறிவித்துள்ள E-pass கண்டிப்பாக கைவசம் இருக்க வேண்டும். அதுபோல் விமான நிலையத்திலிருந்து தமிழக எல்லையினை அடையும் வரையில் இடையில் எங்கும் இறங்க அனுமதி இல்லை.