குவைத்தில் சுகாதரத்துறை அனுமதியுடன் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் சுகாதரத்துறை அனுமதியுடன் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுகிறது
குவைத்தில் ஈத் அல் பித்ர்(ரமலான்) விடுமுறையை முன்னிட்டு சுகாதரத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு,விதிமுறைகள் பின்பற்றி திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும் என்று குவைத் தேசிய திரைப்பட நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹிஷாம் அல் கானம் தெரிவித்தார்.மேலும் கோவிட் நோய்த்தடுப்பு தடுப்பூசி பெற்றவர்களுக்கு திரையரங்குகளுக்குள் நுழைய அனுமதி வழங்கபடும்.
அதேபோல் திரையரங்கில் உள்ள மொத்த இருக்கைகளின் 50 சதவீதம் இருக்கைகளின் மட்டுமே மக்கள் அமர்ந்து திரைப்படம் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். கோவிட் பரவல் நாட்டில் கண்டறியப்பட்ட பின்னர் திரையரங்குகள் குவைத்தில் மீண்டும் திறக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.