குவைத் இந்திய தூதரக சேவைகளை மேலும் எளிதாக வாட்சப் எண்களை அறிமுகம் செய்துள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Image : Indian Embassy Kuwait
குவைத் இந்திய தூதரக சேவைகளை மேலும் எளிதாக வாட்சப் எண்களை அறிமுகம் செய்துள்ளது
குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதன்(அதிகமாக இந்தியர்களிடம் எளிதாக சென்றடைய) ஒரு பகுதியாக வீட்டுத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து பிரவு தொழிலாளர்களும் வாட்சப் மூலம் நேரடியாக புகார்கள் தெரிவிக்கவும் மற்றும் பல்வேறுபட்ட சேவைகள் குறித்த விசாரணைகள் செய்து கொள்ளவும் புதிய ஹெல்ப்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு வகை சேவைகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க 12 வாட்சப் ஹெல்ப்லைன் எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விசாரணைகள் மற்றும் புகார்கள் செய்ய லேண்ட்லைன் எண், மொபைல் எண், மின்னஞ்சல் வசதிகளும் தற்போது நிலுவையிலுள்ள நிலையில் கூடுதலாக தற்போது இப்படி புதிதாக வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகள் மற்றும் புகார்களுக்கு நீங்கள் உங்கள் முழுமையான பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்ணை உள்ளிட்டவை தெளிவாக பதிவு செய்தால் மட்டுமே இந்த சேவை வழியாக பதிலளிக்கப்படும். வீட்டுத் தொழிலாளர்கள் புகார்கள் மற்றும் விசாரணைகளுக்கு 51759394 மற்றும் 55157738 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்கலாம். பிற பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களின் புகார்கள் மற்றும் விசாரணைகள் Text Massage வழியாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இருப்பினும், நேரடியாக அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்ள நினைக்கும் நபர்கள் தூதரகத்தின் லேண்ட்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய தூதரத்தின் வேலை நேரத்தில் இந்த சேவைகளை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்