BREAKING NEWS
latest

Sunday, May 23, 2021

இந்தியாவிலிருந்து ஓமானுக்கு செல்லும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்

இந்தியாவில் இருந்து ஓமானுக்கு செல்லும் விமானங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட தடை தொடரும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது

இந்தியாவிலிருந்து ஓமானுக்கு செல்லும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்

இந்தியாவில் இருந்து ஓமானுக்கு செல்லும் விமானங்களுக்கு கொரோனா பரவல் காரணமாக தொடர்பு தடை விதிப்பதாக சிவில் ஏவியேஷன் ஆணையம் (சிஏஏ) தெரிவித்துள்ளது. இதை அந்நாட்டு பத்திரிகைகள் தற்போது செய்தியாக வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக உச்சக் குழு பல்வேறு சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும், ஆனால் இந்தியாவில் நோய் பரவுவது மிக தீவிரமாக இருப்பதால் விரைவில் மீண்டும் சேவைகள தொடங்குவது சாத்தியமில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த தடை உத்தரவு ஓமனி குடிமக்கள், தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் தூதர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பங்களுக்கு பொருந்தாது. அதுபோல் இந்தியாவைத் தவிர, இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட 16 நாடுகளின் குடிமக்கள் ஓமானுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் செப்டம்பருக்குள் ஓமானில் கோவிட் மூலம் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த மே மாதத்தில் மட்டும் 60 சதவீத நோய் பாதிப்பு வழக்குகளின் எண்ணிகை குறைந்துள்ளன. இந்த போக்கு தொடர்ந்தால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாட்டில் கோவிட் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று ஓமான் செய்தி ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.தற்போது,நாட்டில் சிகிச்சை இருந்து குணமடையும் நோயாளிகளின் விகிதம் 93 சதவீதமாக உள்ளது.

Add your comments to இந்தியாவிலிருந்து ஓமானுக்கு செல்லும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்

« PREV
NEXT »