குவைத்தில் வெளிநாட்டினர் நுழைய தடை தொடரும்;இது தொடர்பான அதிகாரப்பூர்வ செய்தி தற்போது வெளியாகியுள்ளது
Image : இன்றைய அமைச்சரவை கூட்டம
குவைத்தில் வெளிநாட்டினர் நுழைய தடை தொடரும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் வெளிநாட்டினர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று(03/05/21) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தடை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பான செய்தியை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதுபோல் குடிமக்கள் மற்றும் அவர்களது நெருங்கிய வெளிநாட்டு உறவினர்கள் மற்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டன.
கோவிட் தடுப்பூசி போடாவிட்டால் குடிமக்கள், அவர்களது வெளிநாட்டு முதல் தர உறவினர்களையும் நாட்டிற்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என்றும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து கடந்த பிப்ரவரி- 7 முதல் வெளிநாட்டவர்கள் நேரடியாக நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்காலிக மற்றொரு நாட்டில் 14 நாட்கள் தங்கியிருந்து பின்னர் நாட்டில் நுழைய வழங்கப்பட்ட வாய்ப்புக்கும் கடந்த மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.