சவுதியில் போலி சான்றிதழ் பயன்படுத்தி வேலைக்கு சேர்ந்த இளவரசருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100,000 ரியால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
Image : செய்தி பதிவுக்கான மட்டும
சவுதியில் போலி சான்றிதழ் பயன்படுத்தி வேலைக்கு சேர்ந்த இளவரசருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
சவுதி அரேபியாவில் அரசு வேலைக்காக போலி சான்றிதழ்கள் தயாரித்து பணிபுரிந்ததற்காக சவுதி அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மற்றும் 100,000 ரியால்கள் அபராதமும் விதித்துள்ளதாக ஊழல் தடுப்பு பிரிவு ஆணையம் தெரிவித்துள்ளது. நாட்டின் நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி விவகாரத்துறை அமைச்சகத்தில் உயர் பதவியில் வேலை செய்வதற்காக போலியான ஆவணத்தை இளவரசர் தயார் செய்தார் என்று விசாரணையில் தெரிய வந்தது.
இதுபோல் போலியான சான்றிதழ்களை தயாரித்து சவுதி பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு இராணுவக் கல்லூரியில் வேலைக்காக அனுமதி பெற்றதற்காக மற்றொரு மாணவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மற்றும் 50,000 ரியால்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இருவருக்கும் போலி சான்றிதழ்களை தாயர் செய்து வழங்கிய இடைத்தரகராக செயல்பட்ட வெளிநாட்டவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனையும் மற்றும் 20,000 ரியால்களுக்கு அபராதமும் விதித்தார். இதுபோல் ஊழல், மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட பல நபர்களை ரியாத் நீதிமன்றம குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.
இதேபோல் உள்துறை அமைச்சகத்தில் மேஜர் ஜெனரல் பதவியில் இருந்த ஒரு அதிகாரிக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்காக 160,000 ரியால்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை பெற்றவர்களில் வேறு சில உயர் அதிகாரிகளும், ஒரு தொழிலதிபரும் அடங்குவர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.