குவைத்தில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது
Image: KuwaitCity
குவைத்தில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்
குவைத்தில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்பதற்கான அறிகுறிகள் வெளியாகியுள்ளது. அதில் கொரோனா வைரஸ் பரவல் சூழலில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான முக்கியமான அறிவிப்புகள் இன்றைய கூட்டத்திற்குப் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் நிலம்,கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து பாதைகளை திறத்தல் தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மற்றும் பிறருக்கும் வழங்கபடும் சலுகைகள் மற்றும் உணவகங்களின் இயக்கம் முக்கியமாக செயல்படுத்தல் போன்ற முக்கியமான முடிவுகள் இன்றைய கூட்டத்திற்கு பிறகு வெளியாகும் என்று தெரிகிறது.
இதற்கிடைய கொரோனா உயர்மட்ட ஆய்வுக் குழு அமைச்சரவையின் பரிசீலனைக்கு நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், நாட்டின் சுகாதார நிலைமை மேம்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதன் அடிப்படையில், மக்களின் தினசரி வாழ்க்கை ஆனது இயல்புநிலையைக் கொண்டுவருவதன் ஒரு பகுதியாக அமைச்சரவை மேற்குறிப்பிட்ட பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.