குவைத்தில் வெளிநாட்டினருக்கான தடையை நீக்குவது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் நாட்களில் வெளியாகும்;ஆனால் இந்தியர்கள் நுழைய தடை தொடரும் என்று தெரிகிறது
Image : Kuwait Airport
குவைத்தில் வெளிநாட்டினர் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை நீக்குவது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் நாட்களில் வெளியாகும்
குவைத்தில் வெளிநாட்டினர் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை நீக்குவது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் இருப்பினும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்கள் நேரடியாக குவைத்தில் நுழைவதற்கான தடை மேலும் சில வாரங்களுக்கு தொடரும் என்றே தெரிகிறது. அதேபோல் இந்தியாவில் இருந்து பயணிகள் மற்றோரு நாட்டில் தற்காலிகமாக தங்கியிருந்து குவைத்தில் நுழைவதற்கான மறைமுகமான வாய்ப்பும் தடைப்படும் நிலை ஏற்படும்,இதற்கான காரணங்கள் இங்கே பார்க்கலாம்.
காலாவதியுள்ள(Validity Visa) விசா மற்றும் குவைத் அரசால் அங்கீகாரம் பெற்ற கோவிட் நோய்த்தடுப்பு மருந்து எடுத்த வெளிநாட்டினரை அனுமதிக்க குவைத் தற்போது முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் முதல் கட்டத்தில் இது சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்காக மட்டுப்படுத்தப்படும். அதாவது,அதிக ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்போதைக்கு நேரடி நுழைவுக்கு தடை விதிக்கப்படுவார்கள். இதற்காகவே அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலை வாரந்தோறும் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அமைச்சகம் சிறப்புக் குழுவை நியமித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில்,அதிக ஆபத்து உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதன்மையான வரிசையில் உள்ளது. அதுபோல் குவைத் சுகாதரத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி பெற்று இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் நாட்டில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று பார்த்தாலும் அஸ்ட்ராசெனெகா, ஃபைசர், மொடெனா மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கே குவைத் ஒப்புதல் அளித்துள்ளது,அவற்றில் எதுவும் தற்போது இந்தியாவில் கிடைக்கவில்லை.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா செனெகா மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவ் ஷீல்ட் ஒரே தயாரிப்பு என்றாலும், இரண்டு தடுப்பூசிகளுக்கும் இடையிலான பெயரின் வேறுபாடு எதிர்காலத்தில் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இதன் விளைவாக, இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பல குவைத் வெளிநாட்டவர்கள் தடுப்பூசி பெறலாமா...??? வேண்டாமா...??? என்ற குழப்பத்தில் உள்ளனர். குவைத் சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் கோவி ஷீல்ட் உள்ளிட்ட இந்திய தடுப்பூசிகளை சேர்ப்பதே இதற்கு ஒரே தீர்வு ஆகும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர் அல்லது ஃபைசர் போன்ற வெளிநாட்டு தடுப்பூசிகளை இந்தியாவில் கிடைக்கச் செய்வது ஆகும். இல்லையெனில், வெளிநாட்டினர் குவைத்தில் நுழைவதற்கான தடையை நீக்கினாலும்,இந்தியாவில் இருந்து குவைத்திற்கு வருவதற்காக காத்திருக்கின்ற மக்கள் குவைத்துக்குள் நேரடியாக நுழைவதற்கான வாய்ப்பு தடைப்படும். இதன் காரணமாக நேரடியாகவோ அல்லது தற்காலிகமாக மற்றொரு நாட்டில் தங்கியிருந்து குவைத்துக்கு திரும்புவது காலவரையின்றி தொடரும் என்ற தகவல் இந்தியர்கள் மத்தியில் கவலையை எழச்செய்துள்ளது.