கத்தாரில் கோவிட் விதிமுறைகளை மீறியதற்காக மேலும் 861 பேர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
கத்தாரில் கோவிட் விதிமுறைகளை மீறினால் 861 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
கத்தாரில் கோவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த பல்வேறுபட்ட கட்டுபாடுகளை சுகாதரத்துறை விதித்துள்ளது.இந்நிலையில் அங்கு விதிமுறைகளை மீறும் நபர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகின்றன.கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் 960 நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்திருந்த நிலையில். இந்த வாரத்தில் விதிமுறைகளை மீறியதற்காக 861 பேர் மீது புதிதாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இவர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மேலாதிக்க நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் கைது நடவடிக்கைகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன. அந்த அறிக்கையில் பொது இடங்களில் கண்டிப்பாக முககவசம் பயன்படுத்த வேண்டிய இடங்களில் அதை அணியாத 734 பேர் கைது செய்யப்பட்டனர். சமூக இடைவெளி தூரத்தை கடைப்பிடிக்காத காரணத்திற்காக 118 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் கைபேசியில் இஹ்திராஸ் செயலியை பதிவேற்றம் செய்யாத 9 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவிட் விதிமுறைகளை பின்பற்றாததற்கு கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நபர்கள் ஏற்கனவே சட்ட நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் புதியதாக இவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.