குவைத் அரசு மற்றும் இந்திய சமூகம் நாட்டிற்காக செய்த மனிதாபிமான உதவியை,குவைத் இந்திய தூதர் கவுரவப்படுத்தினார் என்ற செய்தி வெளியாகியுள்ளது
Image : குவைத் இந்திய தூதர்
குவைத் அரசு மற்றும் இந்திய சமூகம் செய்த மனிதாபிமான உதவியை இந்திய தூதர் கவுரவப்படுத்தினார்
குவைத் ஆனது இந்தியாவில் ஏற்பட்டுள்ள கோவிட் நெருக்கடியை சமாளிக்க இதுவரை 2,882 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 215 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன், 66 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 11 வென்டிலேட்டர்கள் மற்றும் பல மருந்துகள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளன என்று இந்திய தூதர் சி.பி.ஜார்ஜ் தெரிவித்தார். இவற்றில் 1,200 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 11 வென்டிலேட்டர்கள், 60 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் 215 மெட்ரிக் டன் திரவ-மருத்துவ ஆக்ஸிஜன் ஆகியவை குவைத் அரசால் வழங்கப்பட்டன. 1682 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் 6 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தின் பங்களிப்பாக அளிக்கப்பட்டது என்று இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த "இந்தியாவின் கோவிட் நிலைமை மற்றும் வெளிநாட்டு உதவி" என்ற தலைப்பின் கீழ் நடந்த சிறப்பு கூட்டத்தில் அவர் பேசுகையில் தெரிவித்தார்.
குவைத் விமானப்படையின் சிறப்பு விமானத்தில் இந்த மாதம் 4 ஆம் தேதி முதல் முறையாக நிவாரண உதவிகளை அனுப்பியது. கூடுதலாக, இந்திய கடற்படையின் என். எஸ் கொல்கத்தா, என்.எஸ் கொச்சி, ஐ.என்.எஸ் தபார் என்ற மூன்று போர்க்கப்பல்களில் இந்த உதவிகள் இந்தியாவுக்கு அடுத்தடுத்த நாட்களில் அனுப்பி வைக்கப்பட்டது. மற்றும் ஒரு குவைத் சரக்குக் கப்பல் ஆகியவை மூலம் உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் முறையான திட்டமிடல் மூலம் மத்திய அரசால் விநியோகிக்கப்படும் என்று தூதர் கூறினார். கோவிட் நெருக்கடிக்குப் பின்னர் இந்தியாவுக்கு உதவி வழங்கிய முதன்மையான நாடுகளில் குவைத்தும் ஒன்றாகும். நெருக்கடி காலங்களில் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்த வரலாறு இதற்கு முன்னரும் நடந்துள்ளது என்றும் தூதர் தெரிவித்துள்ளார்.