இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு நேரடியாக பயணிக்க தடையுள்ள நிலையில்,இந்தியருடன் எமிரேட்ஸ் விமானம் துபாய் பறந்தது
இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு ஒரு இந்தியருடன் எமிரேட்ஸ் விமானம் துபாய் பறந்த ருசிகரமான செய்தி வெளியாகியுள்ளது
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியர்கள் நேரடியாக பயணம் செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே ஒரு பயணியுடன் எமிரேட்ஸ் விமானம் மும்பையிலிருந்து துபாய்க்கு பறந்த அதிசயமான நிகழ்வு நடந்துள்ளது. மும்பையில் இருந்து ஒரே ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு ஈ.கே.-501 என்ற எமிரேட்ஸ் விமானம் துபாய்க்கு பறந்தது. துபாயை தளமாகக் கொண்ட ஸ்டார்கேம்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் கோல்டன் விசா உடையவருமான பவேஷ் ஜாவேரி என்பவரே இப்படி பயணித்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்கள், இராஜந்திர பிரதிநிதிகள், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அமீரக அதிகாரிகளிடமிருந்து பயண அனுமதி பெற்றவர்களுக்கு இந்த முடிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பவேஷ் ஜாவேரி அவர்கள் 909 திர்ஹாம் அதவாது இந்திய ரூபாய் மதிப்பில் 18,000 பயணத்திற்காக செலவிட்டார் எனவும், விமானத்தின் ஊழியர்கள் மற்றும் விமானிகள் சேர்ந்து தன்னை கைதட்டலுடன் வரவேற்றதாகவும், எமிரேட்ஸிடமிருந்து அவருக்கு அன்பான மற்றும் சிறப்பான வரவேற்பு கிடைத்ததாகவும் ஜாவேரி கூறினார்.